கோயம்பேடு காய்கறி சந்தை நாளை திறந்து இருக்கும் – மாநகராட்சி அறிவிப்பு

 

கோயம்பேடு காய்கறி சந்தை நாளை திறந்து இருக்கும் – மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 3லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 17000 ஐ தாண்டியது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 3லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 17000 ஐ தாண்டியது.  இந்தியாவில் இந்த வைரசால்  520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும்  வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

janta curfew

மோடியின் ஊரடங்கு உத்தரவையடுத்து கோயம்பேடு காய்கறி மற்றும் பழ அங்காடி கடந்த ஞாயிறு அன்று ஒருநாள் மூடப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை நாளை திறந்து இருக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க, சில்லறை விற்பனை அனுமதிக்கப்படாது என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.