கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக ரூ. 15 லட்சம் ஊக்கத் தொகை?!..

 

கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக ரூ. 15 லட்சம் ஊக்கத் தொகை?!..

கத்தாரில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திமுக சார்பில் ரூ. 10 லட்சம், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ. 5 லட்சம், நடிகர் ரோபோ சங்கர் ரூ. 1 லட்சம், விஜய் சேதுபதி ரூ. 5 லட்சமும் உதவித் தொகை வழங்கினார்கள்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர் கோமதி மாரிமுத்துவுக்கும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கும் அதிமுக ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

கத்தாரில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திமுக சார்பில் ரூ. 10 லட்சம், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ. 5 லட்சம், நடிகர் ரோபோ சங்கர் ரூ. 1 லட்சம், விஜய் சேதுபதி ரூ. 5 லட்சமும் உதவித் தொகை வழங்கினார்கள். ஆளும் அதிமுக எந்த உதவியும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

dd

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் நன்னடத்தை விதிமுறை காரணமாக அதிமுக உதவ முடியாத சூழலில் உள்ளது. அந்த விதி நீங்கியதும் கோமதிக்கான உதவியை வழங்குவோம் என அறிவித்திருந்தார். தற்போது கோமதி மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது அதிமுக.

zfbb

அதன்படி தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு ரூ.15லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்-க்கு ரூ.10லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.