கோதாவரி – காவிரி இணைப்பைத் தாமதப்படுத்தக்கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

கோதாவரி – காவிரி இணைப்பைத் தாமதப்படுத்தக்கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
“நதிகள் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்தவும், நிதி திரட்டவும் தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கோதாவரி – காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
“நதிகள் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்தவும், நிதி திரட்டவும் தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.2000-ஆவது ஆண்டுகளிலேயே அமைக்கப்பட வேண்டிய இந்த ஆணையத்தை இனியும்  தாமதிக்காமல் விரைந்து அமைக்க வேண்டும்!

 

தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் அமைக்கப்படவிருப்பதை காரணம் காட்டி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு தாமதிக்கக் கூடாது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாக நிதின்கட்கரி கூறியுள்ள நிலையில், உடனடியாக நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.