கோடை காலத்தில் எப்பவுமே ‘ஜ்ஜில்’லுன்னு இருக்கணுமா? இந்த ஜூஸ் குடுச்சுப்பாருங்க!

 

கோடை காலத்தில் எப்பவுமே ‘ஜ்ஜில்’லுன்னு இருக்கணுமா? இந்த ஜூஸ் குடுச்சுப்பாருங்க!

கோடை காலத்தில் வழக்கத்தைவிட உடலின் வெப்பநிலை சற்று கூடுதலாகவே இருக்கும்.

கோடை காலத்தில் வழக்கத்தைவிட உடலின் வெப்பநிலை சற்று கூடுதலாகவே இருக்கும். குளிந்த நீரில் குளித்தால் ஓரளவுக்கு  சமாளிக்கலாம் என்றாலும்,வருகிற  நாட்களில் குடிக்கிற தண்ணிக்கே சிக்கல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அப்படியான சூழலில் அடிக்கடி தாகம்  எடுப்பது போன்ற உணர்வுகளும் அதிகமாகவே இருக்கும் .உடலின் வெப்பத்தை சமன் படுத்துவதுக்கும்,அடிக்கடி ஏற்படுகிற தாகத்திலிருந்து தப்பிக்கவும் இந்த எலுமிச்சை புதினா ஜூஸை குடிங்க எப்பாவுமே ‘ஜ்ஜில்’லுன்னு இருங்க!

lemon

 
தேவையான பொருட்கள் 

ஐஸ் கட்டி – 7 துண்டு.
இஞ்சி – சிறு துண்டு 
புதினா இலை – 5
சக்கரை – 1 tbsp , தூளாக 
எலுமிச்சை – 1/2 
உப்பு – தேவையான அளவு 
மிளகு தூள் – 1/4 tsp 
குளிர் தண்ணீர் – 1 கப் 

lemon

 
செய்முறை 

ஒரு பாத்திரத்தில், 7 ஐஸ் கட்டியை எடுத்துக்கொள்ளவும்.இஞ்சியை நன்றா மசித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஐஸ்கட்டி இருக்கும் பாத்திரத்தில்,மசித்த இஞ்சி,5 புதினா இலை,1 tbsp நாட்டு சக்கரையை மூன்றையும் சேர்த்துக்கொள்ளவும்.அதோடு,1/2 எலுமிச்சை எடுத்து அதன் சாறை புழிந்து பாத்திரத்தில் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பை மற்றும் 1/4 tsp மிளகையும் சேர்த்து,1 கப் குளிர்ந்த தண்ணீரையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுத்து ஓடவிட்டு எடுத்து குடித்துப்பாருங்கள்..குலு மணாலியில் இருப்பது போல் சொர்க்கமாக இருக்கும்.