கோடிகளோடும் லேடிகளோடும் ஓடிப்போன மடாதிபதி! திருவண்ணாமலையில் திடுக் சம்பவம்..!?

 

கோடிகளோடும் லேடிகளோடும் ஓடிப்போன மடாதிபதி! திருவண்ணாமலையில் திடுக் சம்பவம்..!?

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூரில் இருக்கும் பாண்டுரங்கன் ஆலயத்தை நிர்வகித்து வந்த அருண் சுவாமிகள் கோடிக்கணக்கான பணத்துடனும் , பெண்சீடர்களோடும் தலைமறைவான செய்தி இப்போது வெளிவந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூரில் இருக்கும் பாண்டுரங்கன் ஆலயத்தை நிர்வகித்து வந்த அருண் சுவாமிகள் கோடிக்கணக்கான பணத்துடனும் , பெண்சீடர்களோடும் தலைமறைவான செய்தி இப்போது வெளிவந்திருக்கிறது.

madam

ஜோதிர் மடத்தின் 6வது மடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள்.அவரது சீடரும் அவர் பெயரில் அமைக்கப்பட்ட ஞானானந்தகிரி அறக்கட்டளைக்கு தலைவராகவும் இருந்தவர் சுவாமி ஹரிதாஸ்கிரி.இவர் சென்னையில் உள்ள நாரதகானசபாவை உருவாக்கியவர்களில் ஒருவர். இங்கிலாந்து மலேசியா,சிங்கப்பூர் என்று பல ஊர்களுக்கு பயணம் செய்து நிதிதிரட்டி,பாண்டுரங்கன் ஆலயத்தையும், குருஜி மருத்துவமனையையும் கட்டினார்.கட்டுமான பணிகள் முடிவுறும் சமையத்தில் கங்கைக்கு போனவர் அங்கேயே இறந்துவிட்டார்.

அவருக்குப் பிறகு மடாதிபதியானவர் ஞாமாஜி.இவருடைய காலத்தில் மடத்துக்கும் கோவிலுக்கும் கிடைத்துவந்த நன்கொடைகள் பெருகின.இவருக்கு கைகால் பிடித்துவிடவும்,வேறு உதவிகளுக்கும் அருண் என்பவர் வந்து சேர்கிறார்.2009-ம் ஆண்டு ஞாமாஜி சுவாமிகள் மறைவுக்குப் பிறகு அருணே மடாதிபதியாக அமர்ந்து ஆலய நிர்வாகத்தையும் , மருத்துவமனை நிர்வாகத்தையும் கவனித்து வந்திருக்கிறார்.அந்த சமையத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒரு பெண் இங்கேயே தங்கி அருண் சுவாமியின் சிஷ்யை ஆகிவிட்டார்.

arun samy

அவர் வருகைக்குப் பிறகு அருண் ஒரு சின்ன நித்யானந்தாவாக மாறிவிட்டாராம்.அந்த இங்கிலாந்து சிஷ்யை எப்போதும் மடாதிபதி அருணுடனேயே இருந்திருக்கிறார்.இது வெளியே தெரிந்தால் மடத்தின் பெயர் கெடும் என்று பயந்த நிர்வாகிகள், டி.கே ராஜேந்திரன் டி.ஜி.பியாக இருந்தபோது அவரை சந்தித்தி முறையிட்டார்களாம்.அவரும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை அனுப்பி எச்சரித்தாராம்.ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளும் அருணைக் கண்டித்திருக்கிறார்கள்.

இப்போது மடத்திக்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணத்துடனும்,அந்த இங்கிலாந்து சிஷ்யை உட்பட சில சிஷ்யைகளுடனும் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் மடத்தினர் முறையாக போலீசில் புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை.ஆனால் அதற்குள் விவகாரம் வெளிவந்து விட்டது.இனி இன்னொரு காவியின் லீலைகள் பத்திரிகைகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாகப் பேசப்பட போகிறது.