கொழும்பு, திருவிழா யானைகளுக்கு மதம்பிடித்து மிதித்ததில் 17 பேர் படுகாயம்!

 

கொழும்பு, திருவிழா யானைகளுக்கு மதம்பிடித்து மிதித்ததில் 17 பேர் படுகாயம்!

யானையை அடக்கமுடியாமல் பாகனும் பின்னாடியே ஓட, எதிர்புறமிருந்து மற்றொரு யானைக்கும் அதேநேரம் மதம்பிடித்து அதுவும் துரத்த, இரண்டு யானைகளுக்கும் இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே கோட்டி என்னுமிடத்தில் புத்த மத திருவிழாவான பெரஹரவுக்காக பக்தர்களும் பொதுமக்களும் திரளாக திரண்டிருந்தனர். செண்டை மேளம் தெறிக்க, மின்விளக்குகள் ஜொலிக்க, வாணவேடிக்கைகள் மிளிர என திருவிழா ஊர்வலம் ஜெகஜோதியாக நடைபெற்றது. கடந்த 600 வருடங்களாக கொண்டாடப்பட்டுவரும் இத்திருவிழாவின் பிரமாண்டத்தை காட்ட இரண்டு யானைகளும் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டன.

Elephant rampage injures 17

செண்டை மேளத்தின் தாளத்திற்கேற்ப யானை நடனமாடவேண்டும் என பாகன் நினைத்தாரோ என்னவோ, தெரியவில்லை, வேகமாக அங்குசத்தால் குத்தியிருக்கவேண்டும். பெருந்திரளான கூட்டம், சப்தம், இரைச்சல் இவற்றுடன் சேர்த்து அங்குசத்தால் குத்தும் வாங்கியதில் கடுப்பான யானைக்கு திடீரென மதம்பிடித்து ஓட ஆரம்பித்துவிட்டது. யானையை அடக்கமுடியாமல் பாகனும் பின்னாடியே ஓட, எதிர்புறமிருந்து மற்றொரு யானைக்கும் அதேநேரம் மதம்பிடித்து அதுவும் துரத்த, இரண்டு யானைகளுக்கும் இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.