கொழும்புவில் 9-ஆவது குண்டு வெடிப்பு – வீடியோ உள்ளே?

 

கொழும்புவில் 9-ஆவது குண்டு வெடிப்பு – வீடியோ உள்ளே?

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே இருந்த வேனில் குண்டு வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு: இலங்கை தலைநகரில் 9-ஆவது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். 500 நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் 9-ஆவது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே இருந்த வேனில் குண்டு வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உளவுத்துறையின் அலட்சியப் போக்கே இந்த குண்டுவெடிப்பு நிகழ காரணம் என கூறப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளை சில அரசியல்வாதிகள் சாடி வருகின்றனர். இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்க தினம் அனுசரிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் வாசிங்க: இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்