‘கொல்ல வரானா அந்த கொரானா’-  ஜாலியான  சீனா காலியாகிறது- இந்தியர்களோடு இந்தியன் -2 விமானம் வந்தது .. 

‘கொல்ல வரானா அந்த கொரானா’-  ஜாலியான  சீனா காலியாகிறது- இந்தியர்களோடு இந்தியன் -2 விமானம் வந்தது .. 

கொரோனா  வைரஸால் சீனாவில்  இறந்தவர்களின்  எண்ணிக்கை 144 லிருந்து  304 ஆக உயர்ந்துள்ளது, என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது மேலும் , பிற நாடுகளில் நோய் பரவாமலிருக்க  மற்ற நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்றது .அதனால் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹான் மாகாணத்திலிருந்து 323 இந்தியர்களுடன் 2 வது விமானம் டெல்லியில்  வந்தடைந்தது.

323 பயணிகளுக்கும்  டெல்லியில்  உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸின் அறிகுறி இருக்கிறதா என நடந்த   சோதனைக்குப் பின்னர் அவர்கள்   டெல்லியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லையிலும்   மற்றும் அண்டை மாநிலமான  ஹரியானாவின் மானேசர் ஆகிய இரு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு  கொண்டு செல்லப்படுவார்கள்.

indian-from-china-in-flight

பிப்ரவரி 2, 2020 அன்று இந்திய குடிமக்களை புதுடெல்லிக்கு அழைத்து வந்த இரண்டாவது ஏர் இந்தியா விமானத்தில், டெல்லியின் ஆர்.எம்.எல் மருத்துவமனையின் மருத்துவர்களும்  இருந்தனர்.
மேலும் இதில் மாலத்தீவின் ஏழு பயணிகளும்  இருந்தனர்  என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனஞ்சய் குமார் தெரிவித்தார்.மாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தனது நாட்டின் பிரஜைகளை வுஹானிலிருந்து வெளியே கொண்டு வந்தமைக்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

flight-from-china

.
முதல் விமானத்தில் இருந்த ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனையைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்களும்  பயணிகளை கண்காணிக்க இரண்டாவது விமானத்திலும்  இருந்ததாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.வெளியேற்றப்பட்ட பயணிகளில் ஒருவருக்கு  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகளைக் காட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு நோய்த்தொற்றின் அறிகுறி இருக்கிறதா என   தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும்  பயிற்சி பெற்ற ஊழியர்களால் கவனிக்கப்படுவார்கள்.