கொல்கத்தாவின் இளம்வயது பெண் பேருந்து ஓட்டுநர் – 21 வயது பெண்ணின் டிரைவிங் வீடியோ வைரல்

 

கொல்கத்தாவின் இளம்வயது பெண் பேருந்து ஓட்டுநர் – 21 வயது பெண்ணின் டிரைவிங் வீடியோ வைரல்

21 வயது இளம்பெண் பேருந்து ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கொல்கத்தா: 21  வயது இளம்பெண் பேருந்து ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவின் சலசலப்பான தெருக்களில் ஒரு இளம்பெண் பஸ்ஸை ஓட்டும் 45 விநாடி நீள வீடியோ கிட்டத்தட்ட ஒரே இரவில் வைரலாகியது. கொல்கத்தா நகரத்தின் இளம் பெண் பேருந்து ஓட்டுநரான கல்பனா மொண்டால் உண்மையில் தன் வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறார்.

ttn

கொல்கத்தாவின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நோபாராவில் கல்பனா வசிக்கிறார். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக ஒரு கட்டத்தில் அவரது பள்ளி, கல்லூரி படிப்பு தடைபட்டது. கல்பனா தான் அவரது குடும்பத்தில் கடைக்குட்டி. அவருக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். காலை ஏழு மணிக்கு தினமும் எழுந்து, வீட்டு வேலைகளை செய்வதுடன் சமையலிலும் தன் தாய்க்கு உதவுகிறார். வேலைக்குச் செல்வதற்கு முன் நன்கு காலை உணவை சாப்பிடுகிறார். இவ்வாறு கடினமான சூழ்நிலையில் பேருந்து ஓட்டி கல்பனா தனது குடும்பத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.