கொலைவெறி தாக்குதல் நடத்தியவனை தைரியமாக அடையாளம் காட்டுவேன் ! ஜே.என்.யு. மாணவி உறுதி !

 

கொலைவெறி தாக்குதல் நடத்தியவனை தைரியமாக அடையாளம் காட்டுவேன் ! ஜே.என்.யு. மாணவி உறுதி !

டெல்லியில் செயல்பட்டு வரும் ஜே.என்.யு. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5ம் தேதி இரவு முகமூடி அணிந்த மர்மக் கும்பல் அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் எழுந்தது.

தன்னை கொலைவெறியுடன் தாக்கிய நபரை நிச்சயம் அடையாளம் காட்ட முடியும் என ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தல் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆயிஷா தெரிவித்துள்ளார்.

jnu-university

டெல்லியில் செயல்பட்டு வரும் ஜே.என்.யு. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5ம் தேதி இரவு முகமூடி அணிந்த மர்மக் கும்பல் அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் எழுந்தது. அதவாது விடுதி மற்றும் செமஸ்டர் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி அமைப்பின் தலைவர் ஆயிஷி கோஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்ற பின்னர்தான் இந்த கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

jnu-attack-26

இந் நிலையில் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிஷி கோஷ் சற்று குணம் அடைந்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நானும் என் நண்பரும் சென்றுகொண்டிருந்தபோது 30 பேர் கொண்ட கும்பல் எங்களை மறைவான இடத்திற்கு இழுத்துசென்றது. பின்னர் இரும்புக் கம்பிளை கொண்டு கடுமையாக தாக்கினர். மேலும் என் நண்பர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதுமட்டுமின்றி 30 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர் இதனால் இருவருமே நிலைகுலைந்து போனோம். மேலும் தன்னை கொன்றுவிடவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அனைவரும் முகமூடி அணிந்திருக்க ஒருவன் மட்டும் முகமூடி அணியாமல் இருந்தான். இன்னொரு முறை அவனை பார்த்துவிட்டால் கண்டிப்பாக அடையாளம் காட்டுவேன் என ஆயிஷி கோஷ் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு இந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.