கொலம்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி!

 

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொகோடா: கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியா நாட்டின் தலைநகரான பொகடாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து வானில் அங்குமிங்கும் பறந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் அந்த சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விமானத்துறை அதிகாரிகள் கூறினர்.