கொரோனோ வைரஸ் குறித்து முதன்முதலாக எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் பரிதாபமாக உயிரிழப்பு!

 

கொரோனோ வைரஸ் குறித்து முதன்முதலாக எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொரோனோ வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கை கொடுத்த  சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவி அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ளது. சீனாவை மட்டுமல்லாது,  கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் சுமார் 23 ஆயிரம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

ttn

இதனிடையே  34 வயதான  சீன மருத்துவர் லீ வென்லியாங், சக மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை செய்தி அனுப்பினார். ஆனால்  அதை யாரும் நம்பவில்லை. மேலும் அவர்  பொய்யான தகவலை பரப்பியதாக போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால்  ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் இருப்பதை  அந்நாட்டு அரசு உறுதிசெய்தது.  இதையடுத்து மருத்துவர்  லீ வென்லியாங் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார். 

ttn

இந்நிலையில், மருத்துவர்  லீ வென்லியாங்கிற்கும் கொரோனா தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தொடர் சிகிச்சையிலிருந்த அவர் நேற்று பலியானார். இந்த சம்பவம் சீனநாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.