கொரோனா வைரஸ் பீதி….. பன்னாட்டு கடற்படை போர்பயிற்சியை ஒத்திவைத்த இந்திய கடற்படை

 

கொரோனா வைரஸ் பீதி….. பன்னாட்டு கடற்படை போர்பயிற்சியை ஒத்திவைத்த இந்திய கடற்படை

கொரோனா வைரஸ் காரணமாக, இந்திய கடற்படை இந்தமாதம் நடத்த இருந்த பன்னாட்டு கடற்படை போர்பயிற்சியை ஒத்திவைத்துள்ளது.

இந்திய கடற்படை இம்மாதம் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை, விசாகபட்டிணம் கடற்கரை பகுதியில் மிலன் 2020 என்ற பன்னாட்டு கடற்படை போர்பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. இந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்க 41 நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்து இருந்தது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.

இந்திய போர்க்கப்பல்

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நமது அண்டை நாடுகள் என மொத்தம் 32 நாடுகள் இந்தியா நடத்தும் மிலன் 2020 கடற்படை போர்பயிற்சியில் பங்கேற்பதாக உறுதி செய்து இருந்தன. இந்நிலையில் தற்போது நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

பயிற்சியில் போர்க்கப்பல்கள் (கோப்பு படம்)

இதனையடுத்து மற்ற நாடுகளிலிருந்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பலத்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்திய கடற்படை தனது பன்னாட்டு கடற்பயிற்சியை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் மாத்வால் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக மிலன் 2020 கடற்படை போர்பயிற்சியை இந்திய கடற்படை ஒத்திவைத்துள்ளது. மேலும் வசதியான மற்றொரு தேதியில்  மிலன் கடற்படை பயிற்சியை நடத்த திட்டமிட எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.