கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 20 ஆவது இடத்தில் உள்ளது : அமைச்சர் செல்லூர் ராஜு

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 20 ஆவது இடத்தில் உள்ளது : அமைச்சர் செல்லூர் ராஜு

‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அப்பகுதியில் இருக்கும் அனைவருக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் வசிக்கும் ஒருவருக்கும் இந்த காய்ச்சல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் கொரோனா வைரஸ்  காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ttn

இந்த நோய்க்கான மருந்துக்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், சீனா திணறி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம்  இந்தியா 23 ஆவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 27 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 20-வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.