கொரோனா வைரஸ் பரவுதல் என்னும் சமூக பரிமாற்றம் நிலையை எட்டவில்லை…. மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல்

 

கொரோனா வைரஸ் பரவுதல் என்னும் சமூக பரிமாற்றம் நிலையை எட்டவில்லை…. மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல்

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் என்னம் சமூக பரிமாற்றம் நிலையை எட்டவில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாளுக்கு தீவிரமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்வது போல்  தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் புதிதாக 227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுதல் சமூக பரிமாற்றம் நிலையை எட்டி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவ பரிசோதனை

ஆனால் இன்னும் அது போன்ற நிலை ஏற்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறுகையில், நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் லோக்கல் பரிமாற்றம் நிலையில்தான் உள்ளது. தற்போது வரை சமூக பரிமாற்றம் நிலையை எட்டவில்லை என தெரிவித்தது.

லாவ் அகர்வால்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுதல் சமூக பரிமாற்றம் நிலையில் இருந்தால், களமட்டத்தில் கோவிட்19க்கான விழிப்புணர்வு மற்றும் நிர்வாகத்தின் அளவை அதிகரிக்க ஊடகத்தின் வாயிலாக சமூகத்துக்கு தெரிவிப்போம். நம் நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ தொட 12 நாட்கள் ஆனது. ஆனால் இதே காலத்தில் வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணி்க்கை பல மடங்காக இருந்தது என தெரிவித்தார்.