கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 70 ஆயிரம் சிறைக் கைதிகள் விடுவிப்பு – ஈரான் அரசு நடவடிக்கை

 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 70 ஆயிரம் சிறைக் கைதிகள் விடுவிப்பு – ஈரான் அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

தெஹ்ரான்: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

ttn

இந்த நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 43 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 237-ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் பரவக் கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிறைச்சாலைக்கும் கொரோனா வைரஸ் பரவினால் உயிரிழப்பு மிக அதிகமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். ஆனால் கைதிகளை விடுவிப்பதால் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.