கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு பரவாமல் இருக்க உலக சுகாதார அமைப்பின் முக்கிய டிப்ஸ்கள்

 

கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு பரவாமல் இருக்க உலக சுகாதார அமைப்பின் முக்கிய டிப்ஸ்கள்

கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விவரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4983-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரம் கடந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விவரித்துள்ளது.

1.சானிடைசர் போன்ற கிருமிநாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். இதன் மூலம் கைகளில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் கொல்லப்படும்.

2.உங்களின் இருமல் அல்லது தும்மலுக்கு இடையில் குறைந்தது 1 மீட்டர் (3 அடி) இடத்தை பராமரிக்கவும். யாராவது இருமும்போது அல்லது தும்மும்போது ​​அவர்களை விட்டு விலகி நிற்க வேண்டும்.

3.அசுத்தமான கைகள் மூலம் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய்க்கு அருகில் தொடும்போது கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

4.உங்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் இடையில் நல்ல சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5.காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதிப்பது அவசியம்.

6.உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே மருத்துவரின் கண்காணிப்பில் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை எளிதில் தடுக்க முடியும்.