கொரோனா வைரஸ் தாக்கத்தால் வழக்கறிஞர்கள் கவுன், கோட் அணிய வேண்டாம்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வழக்கறிஞர்கள் கவுன், கோட் அணிய வேண்டாம்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.   

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கொரோனா வைரஸை அழிக்க முடியாது, அதோடு நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து விட்டது. இவ்வாறு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.   

ttn

அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, அங்கிகள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். அதனை கருத்தில் கொண்டு  உச்சநீதிமன்றத்தின் செயலாளர் கல்கோன்கர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

ttn

அதில், காணொளி வாயிலாக விசாரணை நடைபெறும் போது வழக்கறிஞர்கள் கருப்பு கோர்ட், அங்கிகள் அணிவதை தவிர்க்கலாம் என்றும் கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதற்கு பதிலாக வெள்ளை சட்டை/சல்வார் கமீஸ்/ வெள்ளை சேலை மற்றும் வெள்ளை கழுத்து நிறப்பட்டை அணிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.