கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. போடக் கூடாது…. ராகுல் காந்தி வலியுறுத்தல்..

 

கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. போடக் கூடாது…. ராகுல் காந்தி வலியுறுத்தல்..

கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான கருவிகளுக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தொடர்பான தனது ஆலோசனைகளை மத்திய அரசுக்கு அடிக்கடி கூறி வருகிறார். அந்த வகையில் போது கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. (சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) விதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி.எஸ்.டி.

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், இந்த கடிமான கோவிட்-19 நேரத்தில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சிறு மற்றும் பெரிய மருத்துவ கருவிகள்  ஜி.எஸ்.டி. இல்லாமல் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என இந்தியில் பதிவு செய்து இருந்தார். மேலும், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில கருவிகளை குறிப்பிட்டு அவற்றுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் தொடர்பான பட்டியலையும் ராகுல் காந்தி வெளியிட்டு இருந்தார்.

சானிடைசர்

ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டில், சானிடைசர், சோப், மாஸ்க் மற்றும் இதர கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலிப்பது தவறு. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களிடமிருந்து சானிடைசர், சோப், மாஸ்க் மற்றும் கிளவுஸ் உள்ளிட்ட இதர கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இது தவறு. #ஜி.எஸ்.டி.இல்லா கொரோனா தேவை என்பதில் நாங்கள் ஆதரவாக நிற்போம் என பதிவு செய்து இருந்தார்.