கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை

 

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 17 ஆயிரத்து 205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 21 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சீனா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது.

ttn

இந்த நிலையில், சீனா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் பேஸ்புக் தளத்தில் அதிகளவு பரவி வருகிறது. அவ்வாறு போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு முரணாக இருக்கும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.