கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய இரண்டு பேருக்கு குண்டாஸ்

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய இரண்டு பேருக்கு குண்டாஸ்

கொரோனா வைரஸ் குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி பெயரை பயன்படுத்தி தவறான தகவலை பரப்பிய 2 பேர் கோபிச்செட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுளனர். 

கொரோனா வைரஸ் குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி பெயரை பயன்படுத்தி தவறான தகவலை பரப்பிய 2 பேர் கோபிச்செட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உயிரிழப்பு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 433 பேர் பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் கைது தொடர்கிறது. 

 arrest

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில் 24 நபா்களுக்கு கொரோனா காய்ச்சல் பரவியுள்ளதாக புதியதலைமுறை லோகோவைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய அதே பகுதியைச்சோ்ந்த பூபாலன் மற்றும் காா்ததிகேயன் ஆகிய இரு கல்லூாி மாணவா்களை பங்களாபுதூா் காவல்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதன்பின் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.