கொரோனா வைரஸ் எதிரொலி : சீனாவிலிருந்து வந்த 8 பேருக்குத் திருமணம், காது குத்துக்கு செல்ல தடை!

 

கொரோனா வைரஸ் எதிரொலி : சீனாவிலிருந்து வந்த 8 பேருக்குத் திருமணம், காது குத்துக்கு செல்ல தடை!

‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அப்பகுதியில் இருக்கும் அனைவருக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்த பரவும்  புதிய வகை வைரஸ் காய்ச்சல் இந்தியாவிற்குள் பரவாமல் இருக்கச் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும், சீனாவிலிருந்து வரும் நபர்களுக்கு ஸ்கீரீனிங் என்னும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அதன் பிறகே வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் நம் நாட்டுக்குள் அனுமதிக்கப் டுகின்றனர். 
 

ttn

இந்நிலையில் கோவை, பொள்ளாச்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் திண்டுக்கல், சென்னையைச் சேர்ந்த 2 பேர் என மொத்தமாக 8 பேர் சீனாவிலிருந்து கோவை விமானநிலையம் வந்துள்ளனர். அங்கு அவர்களுக்குச் சோதனை நடத்தப்பட்டதில் அந்த வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் 8 பேரும் 28 நாட்களுக்குக் காது குத்து, திருமணம் என்ற எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வீட்டிலேயே தான் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் ஏற்பட்டால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.