கொரோனா வைரஸ் எதிரொலி: உயரும் டிவி விலை!

 

கொரோனா வைரஸ் எதிரொலி: உயரும் டிவி விலை!

சீனாவில் கொரோனா தொற்று காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை வரும் மார்ச் மாதம் முதல் 10 சதவிகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை வரும் மார்ச் மாதம் முதல் 10 சதவிகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தயாரிப்பதற்கு தேவையான முக்கிய உதிரிபாகமான டிவி பேனல்கள்‌ சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்‌படுகின்றன. டிவிக்களில் உள்ள இந்த பேனல்களின் விலை மொத்த விலையில் சுமார் 60 சதவிகிதமாகும். சீன புத்தாண்டையொட்டி அங்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்தியாவில் டிவிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் டிவி பேனல்களை இருப்பு வைத்திருந்தன. ஆனால், சீன புத்தாண்டை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உற்பத்தியில் ஆலைகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்படுள்ளது.

LED smart tv

இதனால், டிவி பேனல்களுக்கு தட்டுப்பாடு‌ ஏற்பட்டு அவற்றின் விலை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவிலிருந்து டிவி பேனல்கள் இந்தியாவுக்கு இறக்குமதியாவதால், இங்கும் டிவிக்களின் விலை 10 சதவிகிதம் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளுக்கான கம்ப்ரசர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின்  விலையும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.