கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்தவர் தப்பி ஓட்டம்?!

 

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்தவர் தப்பி ஓட்டம்?!

கேரளாவில் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் சிலருக்குப் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாயின. 

கொரோனா வைரஸ் என்னும் அந்த கொடிய நோய் சீனாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் மனிதனுக்கு மனிதன் பரவும் தன்மை கொண்டதால், இந்தியாவிற்கும் பரவி விட்டது. கேரளாவில் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் சிலருக்குப் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாயின. 

ttn

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடி பழங்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவர் சீனாவில் பணிபுரிந்து சமீபத்தில் சென்னை ஊருக்குத் திரும்பியுள்ளார். அவருடன் சென்ற 20 சீனா சென்ற 20 பேரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். மாதவன் கடந்த சில நாட்களாக இருமல், சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் அப்பகுதியில் இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளார். 

ttn

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால்  மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல்லும் படி பரிந்துரைத்துள்ளனர். அதன் படி, மாதவன் அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் அவருக்குப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மாதவன் உணவு சாப்பிட்டு வருவதாகக் கூறி மருத்துவ மனையிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லையாம். இதனையடுத்து அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.