கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வேலைக்கான நேர்முகத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் கூகுள்!

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வேலைக்கான நேர்முகத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் கூகுள்!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கூகுள் நிறுவனம் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்ய ஆன்லைனில் நேர்முகத்தேர்வை நடத்துகிறது.

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா வைரஸ் பீதி காரணமாக கூகுள் நிறுவனம் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்ய ஆன்லைனில் நேர்முகத்தேர்வை நடத்துகிறது.

சிலிக்கான்வேலி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க்கில் உள்ள தனது அலுவலகங்களுக்கு நேரடியாக ஊழியர்கள் வந்து வேலை பார்ப்பதற்கு கூகுள் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அந்நிறுவனம் புறக்கணித்து வருகிறது.

ttn

இந்த நிலையில், வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்ய கூகுள் நிறுவனம் ஆன்லைனில் நேர்முகத் தேர்வை நடத்த தொடங்கியுள்ளது. விர்ச்சுவல் முறையில் நேர்முகத் தேர்வை நடத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் ஊழியர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதால் இந்த முறையை கூகுள் நிறுவனம் பின்பற்றுகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.