கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – 2020 ஜெனீவா மோட்டார் விழா ரத்து

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – 2020 ஜெனீவா மோட்டார் விழா ரத்து

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற இருந்த ஜெனீவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கிரான்ட் சகோனஸ்: ஸ்விட்சர்லாந்தில் நடைபெற இருந்த ஜெனீவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது.

ttn

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் நடைபெற இருந்த ஜெனீவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வருகிற மார்ச் 5-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பீதியால் 1000-க்கும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகள் அனைத்திற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால் 2020 ஜெனீவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டது.