கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: குளோபல் மார்கெட்டிங் மாநாட்டில் இருந்தும் ஃபேஸ்புக் நிறுவனம் விலகல்

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: குளோபல் மார்கெட்டிங் மாநாட்டில் இருந்தும் ஃபேஸ்புக் நிறுவனம் விலகல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குளோபல் மார்கெட்டிங் மாநாட்டில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் விலகியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குளோபல் மார்கெட்டிங் மாநாட்டில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் விலகியுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பல துறைகளிலும் ஆட்டிப் படைக்கிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குளோபல் மார்கெட்டிங் மாநாட்டில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் விலகியுள்ளது. வருகிற மார்ச் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்த மாநாடு நடக்கவிருக்கிறது. இதில் சுமார்  4000 பங்கேற்பாளர்கள் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

முன்னதாக இதே காரணத்தால் பார்சிலோனாவில் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஏ.டி&டி போன்ற பெரும் அமெரிக்க நிறுவனங்களும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் இருந்து விலகியுள்ளன. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1662 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் அச்சுறுத்தலால் பெரிய நிகழ்ச்சிகளில் பல நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.