கொரோனா வைரஸ்க்கு மீண்டும் ஒருவர் பலி – சீனாவில் மக்கள் பீதி!

 

கொரோனா வைரஸ்க்கு மீண்டும் ஒருவர் பலி – சீனாவில் மக்கள் பீதி!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4வதாக ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4வதாக ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே கொரோனா வைரஸ்’ என்றழைக்கப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவி வருகிறது. முதன் முதலில் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. முதற்கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதர்களிடையே இந்தக் காய்ச்சல் பரவும் என்று தெரிய வந்துள்ளது.

top tamil news

முன்னதாக இந்த வைரஸ் காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து பரவுவதாக வதந்தி கிளம்பியது. இந்நிலையில், வுகான் நகரில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 170 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ttn

சீனாவில் நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க 3 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவதாக ஒருவர் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியிருப்பதாக வுகான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது 89 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் சீனாவில் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகமூடி அணிந்தே வெளியில் சென்று வருகிறார்கள்.