கொரோனா வைரஸ்க்கு டிப்ஸ் கொடுத்தால் ரூ.1லட்சம் பரிசு! பிரதமர் மோடி 

 

கொரோனா வைரஸ்க்கு டிப்ஸ் கொடுத்தால் ரூ.1லட்சம் பரிசு! பிரதமர் மோடி 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

Modi

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சார்க் நாடுகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது வைரஸ்க்கு எதிராக அவசர நிதியாக சார்க் நாடுகள் நிதி அளிக்க வேண்டும். இந்தியா இதற்காக 10 மில்லியன் டாலர் அளிக்கும். சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக ஆராய்ச்சி மையங்களை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்நிலையில் “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் சொல்லுங்கள். சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.