கொரோனா வைரஸை சுற்றிவளைத்து கொல்வோம்- பிரதமர் மோடி

 

கொரோனா வைரஸை சுற்றிவளைத்து கொல்வோம்- பிரதமர் மோடி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

modi

இன்று வாரணாசி மக்களிடம் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “21 நாட்களுக்கு வீட்டில் இருந்து கொரோனாவை விரட்டுவோம். கொரோனா வைரஸை சுற்றிவளைத்து கொல்வோம். இக்கட்டான இந்த சூழலில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த விடுமுறையை செலவழித்துவருகின்றனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். அதனை நான் பார்த்தேன். சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, கைகளை எப்படி கழுவ வேண்டும், தவறான நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றக்கூடாது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.