“கொரோனா வைரஸால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு..உண்மையை மறைக்கும் சீன அரசு” சீன கோடீஸ்வரரின் அதிர்ச்சி தரும் தகவல்!

 

“கொரோனா வைரஸால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு..உண்மையை மறைக்கும் சீன அரசு” சீன கோடீஸ்வரரின் அதிர்ச்சி தரும் தகவல்!

குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1016 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன அரசு செய்வதறியாது முடங்கி போயுள்ளது. 

 

ttn

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ்  பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படும் வுஹனா மாகாணத்திற்குள்  யாரும் நுழைய கூடாது என சீன அரசு கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது. அங்கு தான் கொரோனா வைரஸ்  பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் சீன அரசு எரித்து வருகிறது.  தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். 15 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்  இவற்றையெல்லாம் சீன அரசு மறைத்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக சீன சுகாதாரத் துறை, 3.8 கோடி பேர் வசிக்கும் வுஹானாவில்  50 லட்சம் பேர் மாயமாகியுள்ளதாக கூறிய நிலையில் குவோ வெங்கூய்  கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.