கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது… தொடர்ந்து 2வது நாளாக புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி….

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது… தொடர்ந்து 2வது நாளாக புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி….

நம் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது.

நாளுக்கு நாள் தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு போகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது.

கொரோனா வைரஸ்

நம் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக  நேற்றும் புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று புதிதாக 1,200 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்து தமிழ்நாடு (580 பேர்), டெல்லி (448 பேர்) மற்றும் குஜராத் (388 பேர்) ஆகிய மாநிலங்களிலும் நேற்று புதிதாக கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

நாடு முழுவதுமாக கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 106 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 43 பேர் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர். அடுத்து குஜராத்தில் அதிகபட்சமாக 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை கொரோனா வைரஸிலிருந்து மொத்தம் 16,600 பேர் குணம் அடைந்துள்ளனர். இது இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதமாகும்.