கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் எரித்து விடுங்கள்…. பம்பாய் பேராயர் வலியுறுத்தல்..

 

கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் எரித்து விடுங்கள்…. பம்பாய் பேராயர் வலியுறுத்தல்..

கொரோன வைரஸின் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பதில் எரித்து (தகனம்) விடுங்கள் என பாதரியார்களுக்கு பம்பாய் பேராயர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது மக்களிடம் பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் அருகில் செல்ல மக்கள் பயப்படுகின்றனர். மேலும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்கள் மதபாகுபாடு பார்க்காமல் தகனம் செய்யப்படுகிறது.

அடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடல்களை புதைக்க கூடாது மதத்தை பொருட்படுத்தாமல் உடல்களை எரிக்க வேண்டும் என பி.எம்.சி. (பிரஹன்மும்பை மாநகராட்சி) சுற்றிக்கை விட்டது. மேலும் கட்டாயம் அடக்கம் செய்ய வேண்டும் என்றால் மும்பை மாநகராட்சியின் எல்லைக்கு வெளியே அடக்கம் செய்யலாம் என கடந்த சில தினங்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதனை பி.எம்.பி. திரும்ப பெற்றுள்ளது.

சர்ச்

இந்த சூழ்நிலையில், பாம்பே பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கோவிட்-19 தொற்றுநோயின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக தகனம் செய்யுமாறு பாதிரியார்களிடம் கேட்டுக்கொண்டார். பேராயரின் செய்திதொடர்பாளர் இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வது குறித்து நகராட்சி ஆணையரின் கோரிக்கையை கவனம் செலுத்துமாறு கார்டினல் வலியுறுத்தினார்.