கொரோனா விஷயத்தில் பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பு

 

கொரோனா விஷயத்தில் பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பு

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவது குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவது குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராட சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நோபளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

modi

இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்தை பெரும்பாலான சார்க் நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானும் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. கொரோனாவை தடுக்க இணைந்து பணியாற்றத் தயார் என்று அந்நாடு இன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், “கொரோனா வைரஸை பிராந்தியம் மற்றும் உலகளவில் இணைந்து எதிர்கொள்வது அவசியமாக உள்ளது. சார்க் நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் அழைப்பபு விடுத்திருந்தார். இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தை நாங்கள் தொடர்பு கொண்டோம். தனது பக்கத்து நாடுகளுக்கு உதவி செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்றார்.