கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் உயிரிழப்பு!

கொரோனா வார்டில்  சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார்  உயிரிழப்பு!

சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று 27 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று 27 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 

tt

இந்நிலையில்   மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில்  சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.  அவருக்கு நேற்று வெளியான மருத்துவ அறிக்கையின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

ttt

இதன் காரணமாக கொரோனா உயிரிழப்பு வழிகாட்டுதல்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றன. இதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல்துறையினர் , அர்ச்சகர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.