கொரோனா பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்தது உ.பி அரசு!

 

கொரோனா பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்தது உ.பி அரசு!

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 3லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 17000 ஐ தாண்டியது.  இந்தியாவில் இந்த வைரசால்  520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடபட்டுள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களில் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும்  வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

janta curfew

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் 33 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மாநில போரிடராக அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளியுள்ளது.