கொரோனா பாதிப்பு விளைவு: நீட் தேர்வை ஒத்தி வைத்து மத்திய அரசு அறிவிப்பு

 

கொரோனா பாதிப்பு விளைவு: நீட் தேர்வை ஒத்தி வைத்து மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு விளைவால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: கொரோனா பாதிப்பு விளைவால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 66 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக பல தேர்வுகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதனால் அவை நடக்கும் தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

neet

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி அத்தேர்வுகள் நடைபெறவிருந்தது. பிளஸ்-2 தேர்வுகள் பல மாநிலங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எப்போது நடத்தப்படும் என பின்னர் தேதி அறிவிக்கப்படும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இத்தகவலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக சி.ஏ தேர்வுகள் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை நடக்கும் என்று ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.