கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி

 

கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி

அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்தால் கொரோனாவை ஒழிக்க முடியும்” என்று கூறினார்.  

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இரூப்பினும் தமிழக அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவந்துள்ளது.  

ff

இந்நிலையில் கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் பேசி வருகிறார். 
அப்போது பேசிய அவர், “தனிமனித இடைவெளி, கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்தால் கொரோனாவை ஒழிக்க முடியும்” என்று கூறினார்.  

ff

தொடர்ந்து பேசிய அவர், “வேளாண் பணிகளுக்கு எவ்வித விதிவிலக்கும் கிடையாது. ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.  தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு என்று கூறியுள்ள அவர்,  மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.