கொரோனா பாதிப்பு எதிரொலி – கட்டணம் கொண்ட 4 சேனல்கள் இலவச சேனல்களாக மாற்றம்

 

கொரோனா பாதிப்பு எதிரொலி – கட்டணம் கொண்ட 4 சேனல்கள் இலவச சேனல்களாக மாற்றம்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக கட்டணம் கொண்ட 4 சேனல்கள் இலவச சேனல்களாக மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி: கொரோனா பாதிப்பு எதிரொலியாக கட்டணம் கொண்ட 4 சேனல்கள் இலவச சேனல்களாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்திய ஒளிபரப்பாளர்கள் அரசுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். மேலும் மக்களை மகிழ்விப்பதன் மூலம் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கு உதவி செய்கிறார்கள். இந்த நிலையில், கட்டணம் கொண்ட 4 சேனல்களை அடுத்த 2 மாதங்களுக்கு அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக இந்திய ஒளிபரப்பு துறை அறிவித்துள்ளது.

ttn

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் கட்டணம் கொண்ட நான்கு சேனல்கள் இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி பால், ஸ்டார் உட்சவ், ஜீ அன்மோல் மற்றும் கலர்ஸ் ரிஷ்டே ஆகிய சேனல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் இரண்டு மாத காலத்திற்கு அனைத்து டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகளிலும் இலவசமாகக் கிடைக்கும்.