கொரோனா பரவல் எதிரொலி: ரயில்களில் போர்வை வழங்கப்படாது!

 

கொரோனா பரவல் எதிரொலி: ரயில்களில் போர்வை வழங்கப்படாது!

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தையடுத்து மக்களிடையே பீதி இன்னும் அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன வசதிகொண்ட ரயில் பெட்டிகளில் வழக்கமாக வழங்கப்படும் போர்வைகள், தலையணை, தலையணை உறை இனி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயிலில் உள்ள திரைச்சீலைகள், துண்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட மாட்டது.

Blankets

பயணிகள் தேவை என கேட்டால் மட்டுமே போர்வை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்களின் முதல் வகுப்பில் உள்ள கண்ணாடி திரைகள் அனைத்தையும் அகற்ற ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பயணம் முடிந்த பிறகும் ரயில் பெட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய ரயில்வே ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள பயணிகள் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.