கொரோனா நோயில் இருந்து குணமானவர்களை கரகோஷம் எழுப்பி வழியனுப்பி வைத்த மருத்துவ ஊழியர்கள்

 

கொரோனா நோயில் இருந்து குணமானவர்களை கரகோஷம் எழுப்பி வழியனுப்பி வைத்த மருத்துவ ஊழியர்கள்

கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களை மருத்துவ ஊழியர்கள் கைதட்டி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி: கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களை மருத்துவ ஊழியர்கள் கைதட்டி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸால் 2 புதிய உயிரிழப்புகள் மற்றும் 38 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகி உள்ளதாக நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 1242-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயிலிருந்து குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது. இந்த 38 வழக்குகளில் 34 பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்புகள் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நடத்திய மத நிகழ்விலிருந்து வந்தவை ஆகும்.

trichy

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமானவர்களை வழியனுப்பும் நிகழ்வு திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியன், மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குணமடைந்த 32 பேர் ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பழங்கள், பிஸ்கட்கள் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினர். கொரோனா நோயிலிருந்து குணமான 32 பேரும் வீட்டுக்கு கிளம்பும்போது  அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் கைதட்டி அவர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.