கொரோனா நேரத்தில் முன்னாள் முதல்வர் மகனுக்கு திருமணம்…20 பேர் மட்டுமே பங்கேற்பு என தகவல்!

 

கொரோனா நேரத்தில் முன்னாள் முதல்வர் மகனுக்கு திருமணம்…20 பேர் மட்டுமே பங்கேற்பு என தகவல்!

கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அதேபோல் இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ttn

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுபவிழாக்களை கோலாகலமாக நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்தும் அல்லது வீட்டில் எளிமையாகவும் நடத்தி வருகிறார்கள். 

tt

இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி  மகன் நிகிலின் திருமணம் ஏப்ரல் 17 ஆம் தேதி தங்களது வீட்டில் நடைபெறுகிறது. ஏப்ரல் 17 நல்ல நாள் என்பதால் திருமணம் நிச்சயம் நடைபெறும், ஆனால் ஆடம்பரமாக இல்லாமல் எங்கள் வீட்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ttn

அதில் 20 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். சுமூகமான சூழல் அமைந்தவுடன் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து கொண்டாடப்படும்” என்று குமாரசாமி  கூறியுள்ளார்.