கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது; பொதுமக்கள் ரூ.100ஆவது கொடுங்க- முதல்வர் பழனிசாமி

 

கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது; பொதுமக்கள் ரூ.100ஆவது கொடுங்க- முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 600க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “ கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம். பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கலாம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் தேர்வை எப்போது நடத்துவது என ஆலோசித்து முடிவெடுக்கப்படும். சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம். edappadi palanisamyமருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர். 12 நலவாரியங்களில் உள்ள 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். கொரோனா பரிசோதனைக்காக இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன. விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” எனக்கூறினார்.