கொரோனா தொற்று இருப்பவரின் போனில் டிக் டாக் செய்த தூய்மை பணியாளர்கள் சஸ்பெண்ட்!

 

கொரோனா தொற்று இருப்பவரின் போனில் டிக் டாக் செய்த தூய்மை பணியாளர்கள் சஸ்பெண்ட்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவரை தவிர வேறு யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கன்னியாகுமரியில் உயிரிழந்த 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அறிவித்தது. 

ttn

கொரோனா வைரஸ் அறிகுறியால் மாவட்டந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனில் இருந்து டிக் டாக் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய 2 பணிப் பெண்கள் டிக் டாக் செய்தது தெரிய வந்துள்ளது. 

ttn

அதனையடுத்து அந்த 3 பேரையும் பணிநீக்கம் செய்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண் உபயோகப்படுத்திய செல்போனை உபயோகப் படுத்தியதால் அந்த 3 பேரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.