கொரோனா தொற்றில் இரண்டாம் நிலையில்தான் தமிழகம் உள்ளது! மாற்றிமாற்றி பேசும் சுகாதாரத்துறை செயலாளர்

 

கொரோனா தொற்றில் இரண்டாம் நிலையில்தான் தமிழகம் உள்ளது! மாற்றிமாற்றி பேசும் சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,789 பேருக்கு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

coronavirus

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 90412 பேர்  வீட்டுகண்காப்பில் இருக்கிறார்கள். 1580 பேர் வார்டில் இருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பினால் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் இரண்டாம் இடத்தில் தான் உள்ளத. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை” என தெரிவித்தார். நேற்று கொரோனா தொற்றில் தமிழகம் மூன்றாம் நிலையில் உள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்த நிலையில் இன்று இரண்டாம் நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.