கொரோனா டெஸ்ட்! புலம்பித்தவிக்கும் ஆலங்குடி மக்கள்!

 

கொரோனா டெஸ்ட்! புலம்பித்தவிக்கும் ஆலங்குடி மக்கள்!

ரசு மருத்துவமனையின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆலங்குடியில் கொரோனா டெஸ்டில் காலவிரயம் ஏற்படுவதாலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் காதுக்கு இந்த தகவல் சென்ற பின்னரும் இன்னமும் அது சரி செய்யப்படாமல் இருப்பதாலும் மக்கள் புலம்பித்தவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அந்தந்த நிர்வாகத்தின் சார்பில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரித்து வைத்திருப்பார்கள்.
அந்த மாதிரிகளை ஒரு ஆம்புலன்சில் வந்து பெற்று பரிசோதனைக் கூடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பது வழக்கம்.

ஆனால் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மாதிரி எடுக்க வருபவர்களே அங்கு வரும் நபர்களிடம் மாதிரிகளை சேகரிக்க வேண்டுமாம், பிறகு அவர்களே மாதிரி எடுக்கப்பட்ட இடத்தை கிரிமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகே எடுக்கப்பட்ட மாதிரிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமாம். இதனால் காலவிரயம் ஆவதாக சொல்கிறார்கள்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையின் ஒத்துழைப்பு இல்லை என்ற தகவல் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வரை சென்றுள்ளதாக தகவல்.

தனியார் மருத்துவமனைகளை விட புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உயர்தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், சத்தான உணவு, மன அழுத்தத்தை போக்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து அதிக அளவில் வீடு திரும்பியுள்ளனர் என்று கூறிவரும் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, ஆலங்குடி விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வாரா? என்று கேட்கிறார்கள் ஆலங்குடி மக்கள்.