கொரோனா சிகிச்சைக்காக பங்களாவை வழங்கிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர்

 

கொரோனா சிகிச்சைக்காக பங்களாவை வழங்கிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர்

பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தன்னுடைய பங்களாவை பயன்படுத்திக்கொள்ளும்படி அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

பாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தன்னுடைய பங்களாவை பயன்படுத்திக்கொள்ளும்படி அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

பீகாரில் கொரோனா பாதிப்பு காரணமாக 30 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பீகாரில் 38 வயதான நபர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். மேலும் புதிது புதிதாக நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவே, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இடம் இல்லாமல் மாநில அரசு திணறி வருகிறது.

ttn

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பாட்னாவில் எனக்கென்று அரசு ஒதுக்கியுள்ள பங்களாவை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இனி ஒரு மாரணம் கொரோனா காரணமாக நிகழாமல் இருக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.