கொரோனா குடையை கண்டுபிடித்த இளைஞர்…பாராட்டும் மக்கள்!

 

கொரோனா குடையை கண்டுபிடித்த இளைஞர்…பாராட்டும் மக்கள்!

கவரும், மற்றொரு பட்டனை அழுத்தினால் மேலிருந்து கிருமி நாசினியும் தெளிக்கும் படியாக குடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே  போகிறது. இதன் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள்.  

tt

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த வினித் குமார் என்ற இளைஞர்  கொரோனா குடையைத் தயாரித்துள்ளார். அதென்ன கொரோனா குடை என்று கேட்கிறீர்களா? சாதாரண குடைபோல  இருந்தாலும் ஒரு பட்டனை அழுத்தினால் கால் வரை பிளாஸ்டிக் கவரும், மற்றொரு பட்டனை அழுத்தினால் மேலிருந்து கிருமி நாசினியும் தெளிக்கும் படியாக குடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

tt

குடையை சிஎஸ்ஐஆர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் வினித் குமார் தெரிவித்துள்ள நிலையில் இதன் விலை 300 ரூபாய் என நிர்ணயிக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.