“கொரோனா கிடக்கட்டும் பாஸு”… 1 ரூபாய் சிக்கன் பிரியாணிக்கு அலைமோதிய மக்கள் கூட்டம் : விழிபிதுங்கிய ஹோட்டல் நிர்வாகம்!

 

“கொரோனா கிடக்கட்டும் பாஸு”… 1 ரூபாய் சிக்கன் பிரியாணிக்கு அலைமோதிய மக்கள் கூட்டம் : விழிபிதுங்கிய ஹோட்டல் நிர்வாகம்!

கொரோனா வைரஸ் சிக்கன் மூலமாகத் தான் பரவுகிறது என்று வதந்தி பரவ தொடங்கியதும், தமிழகத்தில் கோழிக்கறி விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் சிக்கன் மூலமாகத் தான் பரவுகிறது என்று வதந்தி பரவ தொடங்கியதும், தமிழகத்தில் கோழிக்கறி விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஒரு கிலோ சிக்கன் ரூ.30 முதல் 40 வரை விற்கும் அளவிற்கு வந்து விட்டது. அதே போல, ஹோட்டல்களிலும் மக்கள் யாரும் சிக்கனை சாப்பிட முன்வரவில்லை.

tn

அதனால், சிக்கன் பிரியாணி விற்பனையை மீண்டும் மேம்படுத்த பொன்னேரியில் புதிதாக தொடங்கப்பட்ட கடை ஒன்றில் ரூ.1 க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடையின் விளம்பரத்திற்காக அவ்வாறு போடப்பட்டது என்று கூறப்படுகிறது. இதே போல நேற்று முன்தினமும் விழுப்புரத்திலும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. 

ttn

பொன்னேரியில் ரூ.1 க்கு வழங்கப்பட்ட அந்த பிரியாணி மொத்தமாக 120 கிலோ சிக்கன் வைத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 12 மணிக்கு தொடங்கிய சிக்கன் பிரியாணி விற்பனை இரண்டே மணி நேரத்தில் மொத்தமாக காலியாகியுள்ளது. கம்மி விலைக்குக் கிடைத்தாலே மக்கள் குவிவார்கள்.. அதிலும் 1 ரூபாய்க்கு பிரியாணினு சொன்னா சும்மாவா விடுவாங்க.. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வந்த எல்லா பொதுமக்களும் ஏமாற்றத்துடனே திரும்பிச் சென்றுள்ளனர்.