கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டி ரத்தா?

 

கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டி ரத்தா?

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. 

ttn

இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. ஆனால், ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இதனைத் தள்ளிவைக்க முடியாது என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பவுண்ட் தெரிவித்திருக்கிறார்.